Thursday, January 28, 2010
Wednesday, January 27, 2010
ஆன்லைன் Bank பாஸ்வேர்டு - ய் பாதுகாப்பது எப்படி?
கணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது,வேலை பளு குறைகிறது......).
அதே போல் மற்றவர்கள் இதை பயன்படுத்தி நமது தகவல்கள் - ய் திருடிவிடுகின்றனர் குறிப்பாக நமது பாஸ்வேர்டு - ய். கீ லாக்கர் என்பது நாம் டைப் செய்திடும் கீகள் என்ன என்னவென்று அப்படியே காப்பி செய்து, File-ஆக உருவாக்கி தரும் Software ஆகும். எனவே இந்த Program இருக்கும் கம்ப்யூட்டரில் நாம் இன்டர்நெட் பரிவர்த்தனை செய்கயில் நம்முடைய பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்.
நீங்கள் Browsing Centre-ல் உங்கள் Online Bank Account-ய் தயவு செய்து Open செய்ய வேண்டாம். உங்களுகே தெரியாமல் உங்கள் Password திருடப்பட்டுவிடும்.
பாஸ்வேர்டு டைப் செய்யும் பொழுது இடை இடையே பாஸ்வேர்டில் இல்லாத எழுத்துகளை செர்த்து டைப் செய்து பின்பு Mouse மூலம் அந்த தேவையற்ற எழுத்துகளை நீக்கிவிடுங்கள். கீ லாக்கர் போன்ற Program-கள் நாம் டைப் செய்யும் எழுத்துகளை மட்டுமே நினைவில் கொள்ளும்.
எனவே நம் பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியாது.
Online Bank Account & Credit Card போன்ற முக்கிய வேலைகளை இணையத்தில் நீங்கள் செய்யும் பொழுது முக்கியமாக அந்த இனைய முகவரியை பார்க்கவும் Https என்று இருக்கவேண்டும் S என்பது Secure(ssl)-ய் குறிக்கும். ( Https வாங்குவது மிகவும் கடினம் இதை வாங்க நிறைய வழிமுறைகள் உள்ளது. Bank போன்ற நிறுவனம் இந்த SSL Certificate-ய் வாங்கி வைத்து இருபார்கள் அவர்களின் வாடிகையளர்களின் நன்மைக்காக).
Phishing என்பது இந்த வகை திருட்டை குறிக்கும் அதாவது போலி இணையதளம். Original Website போன்று அதே மாதிரி போலி (Duplicate) இணையதளத்தினை வைத்து இருபார்கள். இந்த போலி (Duplicate) இணையத்தளத்தில் S கண்டிப்பாக இருகாது.
Https இல்லாத இனனையதளத்தில் நீங்கள் உங்கள் User name and Password குடுத்து விட்டிர்கள் என்றால் உங்கள் தகவல்கள் அந்த போலி Website Server-க்கு சென்று சேமித்துவிடும் பின்பு அவர்கள் உங்கள் Account-ல் உள்ள பணத்தினை Easyயாக எடுத்து விடுவார்கள்.
உங்கள் Bank இனனையதள முகவரி குடுத்து செல்லும் பொழுது அந்த இனனையதள முகவரியை நன்றாக கவனித்து பாருங்கள் அது உங்கள் Bank இனனையதளத்திர்கு செல்கிறதா அல்லது வேறு முகவரிக்கு Redirect ஆகி செல்கிறதா என்று பார்க்கவும் .
Redirect என்பது மாற்றி விடுவது என்று அர்த்தம் ( அதாவது x -ல் இருந்து y-க்கு திருப்பி விடுவது )
Online Bank Use செய்யும் பொழுது VIRTUAL KEYBOARD -ய் Enable செய்து அதன் மூலம் (Virtual Keyboard வழியாக) டைப் செய்வது மேலும் நமக்கு பாதுகாப்பனது மற்றும் சிறந்தது .
அதனால் கவனமாக இருக்கவேண்டியது நம் பொறுப்பு
Posted by cooldhinesh at 8:12 AM 0 comments
Saturday, January 23, 2010
computer
சிஸ்டம் பாஸ்வேர்ட்(System password) மறப்பவர்களுக்கு.
போன் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் பல வாசகர்கள் என் சிஸ்டம் பாஸ்வேர்டை மாற்றினேன்; அல்லது பல நாட்களாக கம்ப்யூட்டரைத் தொடவில்லை. அதனால் பாஸ்வேர்ட் மறந்து போச்சு. என்ன செய்யலாம்? என்றெல்லாம் கேட்கின்றனர். இவர்களுக்கு ஒரு அருமருந்து ஒன்று தரப்போகிறேன்.பாஸ்வேர்ட் டைப் செய்கிறோம். சில வேளைகளில் தவறாக டைப் செய்கிறோம். சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வேர்ட் அல்லது வேறு ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கிறோம். இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது யு.எஸ்.பி. டிரைவில் பாஸ்வேர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து பாஸ்வேர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? ஆஹா! என்கிறீர்களா! கீழே படியுங்கள். ஆஹா அஹஹா!! என்பீர்கள்.இந்த டிஸ்க்கிற்குப் பெயர் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் (Password Reset Disk) ஆகும். இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி டிஸ்க் அல்லது யு.எஸ்.பி. டிரைவ் வைத்துப் பயன் படுத்தினால் தான் சரியாக இருக்கும்.
1.முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன்பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. இதில் உங்கள் அக்கவுண்ட்டில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப் பார்க்கவும். இதில் Prevent a Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இனி Forgotten Password விஸார்ட் கிடைக்கும்.
6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும்.
7. தற்போதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின் Nஞுதுt அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் Password டிஸ்க் ரெடியாகிவிடும்.
8. இனி விஸார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம். இதனை எப்படி பயன்படுத்துவது? எப்போதாவது உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டதா?
1.வெல்கம் ஸ்கிரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.
2. அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும். அதில் உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை செருகவும் என்று இருக்கும்.
3. அடுத்து "Use your password reset disk" என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
4. மீண்டும் Password Reset Wizard என்ற விஸார்ட் திறக்கப்படும். தொடர்ந்து புதிய பாஸ்வேர்ட் அமைப்பதற்கான வழி முறை கிடைக்கும். அதனைப் பின்பற்றவும். புதிய பாஸ்வேர்ட் ஒன்றி னை அமைத்து இயக்கலாம்.
5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை. இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம். விஸ்டாவிலும் இதே போல நடைமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர்.
Posted by cooldhinesh at 9:06 AM 0 comments
எங்கோ படித்து ரசித்தவை
ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.
எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.
பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.
நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..
ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை.
யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
பயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்.
அப்பன் எத்தனை உயரமாயிருந்தாலென்ன நீ உயர நீ தான் வளரவேண்டும்
எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்
”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
Posted by cooldhinesh at 9:03 AM 0 comments